இறைச்சி கழிவுகளை ஏற்றி வந்த லாரி சிறைபிடிப்பு


இறைச்சி கழிவுகளை ஏற்றி வந்த லாரி சிறைபிடிப்பு
x

இறைச்சி கழிவுகளை ஏற்றி வந்த லாரியை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.

திருநெல்வேலி

ராதாபுரம்:

கேரள மாநிலத்தில் இருந்து இறைச்சி கழிவுகளை ஏற்றி வந்த கன்டெய்னர் லாரி, நேற்று முன்தினம் ராதாபுரம் அருகே கும்பிளம்பாடு காட்டு பகுதியில் கழிவுகளை கொட்ட சென்றது. இதனை அறிந்த அப்பகுதி மக்கள் கன்டெய்னர் லாரியை சிறைபிடித்தனர். பின்னர் லாரி டிரைவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்றும் அதே கன்டெய்யனர் லாரியில் மீண்டும் இறைச்சி கழிவுகளை ஏற்றி கொண்டு கும்பிளம்பாடு காட்டு பகுதிக்கு கொட்ட சென்றனர். இதையடுத்து அந்த கன்டெய்னர் லாரியை பொதுமக்கள் சிறைபிடித்து ராதாபுரம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.


Related Tags :
Next Story