பர்கூர் மலைப்பாதையில் 100 அடி பள்ளத்தில் பாய்ந்த லாரி


பர்கூர் மலைப்பாதையில் 100 அடி பள்ளத்தில் பாய்ந்த லாரி
x

பர்கூர் மலைப்பாதையில் 100 அடி பள்ளத்தில் லாரி பாய்ந்தது. இதில் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

ஈரோடு

அந்தியூர்

பர்கூர் மலைப்பாதையில் 100 அடி பள்ளத்தில் லாரி பாய்ந்தது. இதில் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

பள்ளத்தில் லாரி பாய்ந்தது

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் இருந்து எம்சாண்ட் மணல் ஏற்றிக்கொண்டு பர்கூர் நோக்கி நேற்று ஒரு மினி லாரி ஒன்று சென்றுகொண்டு இருந்தது. பர்கூர் ஈரெட்டியை சேர்ந்த மாதேவன் என்பவர் லாரியை ஓட்டினார். பர்கூர் மலைப்பாதையில் செட்டிநாடு என்ற இடத்தில் ஒரு வளைவில் திரும்பும்போது, லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதி அதை சாய்த்துவிட்டு, தடுப்பு சுவரையும் உடைத்துக்கொண்டு சுமார் 100 அடி பள்ளத்தில் சில நொடிகளில் கிடுகிடுவென பாய்ந்து நின்றது.

டிரைவர் உயிர் தப்பினார்

இந்த விபத்தில் லாரியின் முன்பகுதி சேதமடைந்தது. சக்கரங்கள் கழன்று விழுந்தன. நல்லவேளையாக டிரைவர் மாதேவன் காயத்துடன் உயிர் தப்பினார். அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் இந்த விபத்து குறித்து பர்கூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். உடனே பள்ளத்தில் இருந்து மாதேவனை மீட்டனர். பின்னர் அவரை சிகிச்சைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் மின்வாரிய பணியாளர்களை வரவழைத்து மின் இணைப்பை துண்டித்து, மின்கம்பத்தையும் அப்புறப்படுத்தினர்.

மேலும் இதுகுறித்து பர்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story