வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியது மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லக்கூடாது அதிகாரிகள் உத்தரவு


வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியது  மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லக்கூடாது  அதிகாரிகள் உத்தரவு
x

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. எனவே மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லக்கூடாது என்று அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

கடலூர்

கடலூர் முதுநகர்,

கடலூர் துறைமுகத்தில் இருந்து சிங்காரத்தோப்பு, தேவனாம்பட்டினம், அக்கரைகோரி, சோனங்குப்பம், ராசாப்பேட்டை, சொத்திகுப்பம், சித்திரப்பேட்டை உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் 100-க்கும் மேற்பட்ட விசை மற்றும் பைபர் படகுகளில் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடித்து வருவது வழக்கம்.

தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தற்போது அந்தமான் அருகே வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது.

மீன்பிடிக்க செல்ல வேண்டாம்

இதன் காரணமாக வங்கக்கடலில் சூறாவளி காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே ஆழ்கடலில் 4 முதல் 5 நாட்கள் வரை தங்கி மீன் பிடிக்கும் விசைப்படகு மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம். மேலும் ஆழ்கடலில் தங்கி மீன் பிடித்துக் கொண்டிருக்கும் விசைப்படகு மீனவர்களும் உடனே கரைக்குத் திரும்ப வேண்டும் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அதே சமயம் சிறிய ரக பைபர் படகுகளில் மீனவர்கள் வழக்கம்போல் மீன் பிடிக்க கடலுக்கு செல்லலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Next Story