பள்ளிக்கல்வித்துறை நடத்திய நீச்சல் போட்டியில் மாநில அளவில் முதலிடம் பிடித்த மதுரை மாணவி


பள்ளிக்கல்வித்துறை நடத்திய நீச்சல் போட்டியில்  மாநில அளவில் முதலிடம் பிடித்த மதுரை மாணவி
x

பள்ளிக்கல்வித்துறை நடத்திய நீச்சல் போட்டியில் மாநில அளவில் முதலிடம் பிடித்து மதுரை மாணவி சாதனை படைத்தார்

மதுரை


தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில், மாணவ, மாணவிகளுக்கு மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த போட்டியில் மதுரை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் பல்வேறு பிரிவுகளில் பதக்கம் வென்றுள்ளனர். 19 வயதுக்குட்பட்ட பிரிவினருக்கான 200 மீட்டர் மெட்லி நீச்சல் போட்டியில், மதுரையை சேர்ந்த மாணவி ஹாஜரா பாத்திமா முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்றுள்ளார். அவருக்கு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கார்த்திகா, முதன்மை உடற்கல்வி ஆய்வாளர், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர், பயிற்சியாளர் மற்றும் காஜியார்தோப்பு ஜமாத் இளைஞர் கூட்டமைப்பினர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.


Next Story