நாய் குறுக்கே வந்ததால் ஏற்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்தவர் பலி


நாய் குறுக்கே வந்ததால் ஏற்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்தவர் பலி
x

நாய் குறுக்கே வந்ததால் ஏற்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்த தனியார் நிறுவன ஊழியர் பலியானர்.

திருவள்ளூர்

தனியார் நிறுவன ஊழியர்

திருத்தணி அடுத்த அம்மையார் குப்பம் பகுதியை சேர்ந்தவர் அருணாச்சலம். (வயது 36). இவர் பிள்ளைபாக்கம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஊழியராக வேலை செய்து வந்தார்.

நேற்று முன்தினம் இவர் வழக்கம்போல் வேலை முடித்துவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் பிள்ளைபாக்கத்தில் இருந்து அம்மையார்குப்பம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

திருவள்ளூர் ரெயில்வே மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்த போது நாய் குறுக்கே வந்ததால் திடீரென பிரேக் போட்டு நிலைத்திடுமாறு கீழே விழுந்துள்ளார்.

இதனால் பலத்த காயமடைந்த அருணாச்சலத்தை அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிர் இழந்தார். விபத்து குறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்

இதைபோல் திருவள்ளூர் அடுத்த சீதாபுரம் பகுதியை சேர்ந்தவர் சத்யா (வயது 40). தனியார் நிறுவன ஊழியர். கடந்த மாதம் 19-ந்தேதியன்று சத்யா வேலை காரணமாக மோட்டார் சைக்கிளில் திருத்தணிக்கு சென்று விட்டு மீண்டும் தன் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அவர் திருவள்ளூர் அடுத்த கைவண்டூர் பஸ் நிறுத்தம் அருகே வந்து கொண்டு இருந்தபோது திடீரென பிரேக் பிடித்த போது மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைத்தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சத்யா நேற்று முன்தினம் சிகிச்சை பலனில்லாமல் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.


Next Story