6 மாதமாக செல்போனில் காதல்:வீடியோ கால் மூலம் இளம்பெண்ணை நிர்வாணமாக பார்த்துவிட்டு திருமணம் செய்ய மறுப்புவாலிபர் மீது வழக்குப்பதிவு


6 மாதமாக செல்போனில் காதல்:வீடியோ கால் மூலம் இளம்பெண்ணை நிர்வாணமாக பார்த்துவிட்டு திருமணம் செய்ய மறுப்புவாலிபர் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 12 Jan 2023 12:15 AM IST (Updated: 12 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

வீடியோ கால் மூலம் இளம்பெண்ணை நிர்வாணமாக பார்த்துவிட்டு திருமணம் செய்ய மறுத்த வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கடலூர்


சிதம்பரம்,


பரங்கிப்பேட்டை கச்சேரி தெருவை சேர்ந்தவர் கண்ணதாசன் மகன் கார்த்திகேயன் (வயது 32). இவரது திருமணத்துக்கு பெற்றோர் பெண் பார்த்து வந்தனர்.

அப்போது ஆன்லைன் திருமண தகவல் மையம் மூலமாக கர்நாடக மாநிலம் பெங்களூரு பானசாவடியை சேர்ந்த 30 வயது இளம்பெண்ணை அவர்கள் பார்த்தனர். அதன்பிறகு கார்த்திகேயனும், அந்த பெண்ணும் செல்போன் எண்ணை தங்களுக்குள் பரிமாறிக்கொண்டு பேசி வந்து இருக்கிறார்கள்.

காதல்

6 மாதமாக செல்போனில் பேசியதால் இருவரும் ஒருவரையொருவர் காதலிக்க தொடங்கினர். பின்னர் இருவரும் அடிக்கடி வீடியோ கால் மூலமாகவும் பேசியுள்ளனர். இதனிடையே சில நாட்களுக்கு முன்பு அந்த பெண், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளார். ஆனால், கார்த்திகேயனோ அவரை திருமணம் செய்ய மறுத்து விட்டார்.

இதையடுத்து, அந்த பெண் பரங்கிப்பேட்டையில் உள்ள கார்த்திகேயன் வீட்டுக்கு தனது திருமணம் பற்றி பேச வந்தார். அப்போது கார்த்திகேயன், அவருடைய தந்தை கண்ணதாசன், தாய் கஸ்தூரி ஆகியோர் சேர்ந்து அந்த பெண்ணை ஆபாசமாக திட்டி, மானபங்கம் செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

நிர்வாணமாக பார்த்தார்

இதுகுறித்து, அந்த பெண் சிதம்பரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதில், ஆன்லைன் திருமண தகவல் மையம் மூலம் என்னிடம் அறிமுகமான கார்த்திகேயனுடன் போனில் பேசி வந்தேன். அப்போது, அவர் 'வீடியோ கால்' மூலம் என்னை நிர்வாணமாக பார்த்தார். அதன்பின்னர் அவர் என்னை திருமணம் செய்ய மறுத்து, ஏமாற்றிவிட்டார். இதன்பின்னர் அவரது வீட்டுக்கு சென்று கேட்ட போது, தன்னை பெற்றோருடன் சேர்ந்து திட்டி, மிரட்டியதாக தெரிவித்துள்ளார்.

அதன்பேரில், கார்த்திகேயன், அவருடைய தந்தை கண்ணதாசன், தாய் கஸ்தூரி ஆகியோர் மீது சப்-இன்ஸ்பெக்டர் பொன்மகரம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story