நிதி நிறுவனம் நடத்தி ரூ.20 லட்சம் மோசடி செய்தவர் கைது


நிதி நிறுவனம் நடத்தி ரூ.20 லட்சம் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்.

திருப்பத்தூர்

வாணியம்பாடியை அடுத்த கிரிசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 24). இவர் செட்டியப்பனூர் ரேஷன் கடை தெருவில் சுந்தரம் என்பவருக்கு சொந்தமான வீட்டை மாதம் ரூ.25 ஆயிரத்திற்கு வாடகைக்கு அதில் அக்‌ஷயம் பைனான்ஸ் என்ற பெயரில் கடந்த மாதம் நிதி நிறுவனம் தொடங்கினார். இந்த நிதி நிறுவனத்தில் தலா ரூ.2,652 கட்டினால் ரூ.40 ஆயிரம் கடன் கொடுப்பதாக விளம்பரம் செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து மகளிர் குழுக்களை சேர்ந்த 1,000 பெண்களிடம் தலா ரூ.2652 வசூலித்து அவர்களுக்கு இந்த மாதம் இறுதியில் தலா ரூ.40 ஆயிரம் கடன் கொடுப்பதாக உறுதியளித்திருந்தார்.

இந்த நிலையில் விக்னேஷ் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டு உரிமையாளர்களுக்கு ஒரு மாதம் வாடகை கொடுத்துவிட்டு, வசூல் செய்த பல லட்சம் ரூபாயுடன் தலைமறைவாகி விட்டார்.

இதனால் பாதிக்கப்பட்ட பெண்கள் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வந்த ராமகிருஷ்ணன் என்பவரை பிடித்து வாணியம்பாடி தாலுகா போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர் அளித்த தகவலின் பேரில் தலைமறைவாக இருந்த விக்னேஷை திருப்பத்தூர் மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு நிலவழகன் தலைமையிலான போலீசார், கைது கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story