ஆஸ்பத்திரி வளாகத்தில் தூங்கிய வாலிபரிடம் செல்போன் திருடியவர் சிக்கினார்
நெல்லை அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் தூங்கிய வாலிபரிடம் செல்போன் திருடியவர் சிக்கினார்.
திருநெல்வேலி
நெல்லை அருகே சீவலப்பேரியைச் சேர்ந்தவர் சுடலைமுத்து மகன் கசமுத்து (வயது 20). இவர் நெல்லை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் தனது உறவினரை பார்க்க சென்றார். பின்னர் அவர் இரவில் அரசு ஆஸ்பத்திரி வளாகத்திலேயே படுத்து தூங்கினார். அப்போது அங்கு வந்த மர்மநபர் நைசாக கசமுத்துவின் செல்போனை திருடிச் சென்றார்.
உடனே அக்கம்பக்கத்தினர் அந்த நபரை கையும் களவுமாக பிடித்து நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசாரின் விசாரணையில், அவர் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வெள்ளூரைச் சேர்ந்த இசக்கி (37) என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து, செல்போனை மீட்டு கசமுத்துவிடம் ஒப்படைத்தனர்.
Related Tags :
Next Story