புகையிலைப்பொருள் விற்பனையை தடுக்க முயன்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது


புகையிலைப்பொருள் விற்பனையை தடுக்க முயன்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
x
தினத்தந்தி 17 Aug 2022 8:09 PM IST (Updated: 17 Aug 2022 10:18 PM IST)
t-max-icont-min-icon

புகையிலைப்பொருள் விற்பனையை தடுக்க முயன்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசாா் கைது செய்தனா்.

விழுப்புரம்

விழுப்புரம் காகுப்பத்தில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் தாலுகா போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையிலான போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு அதே பகுதியை சேர்ந்த பழனி (வயது 52) என்பவர் போதையூட்டக்கூடிய அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரை பிடிக்க முயன்றபோது சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரனை அவர், அரசு பணியை செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்தார். இதையடுத்து பழனியை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த 14 பாக்கெட் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.


Next Story