ஏரியில் மீன்பிடிக்க சென்றவர் நீரில் மூழ்கி சாவு
சேலம்
சங்ககிரி:-
சங்ககிரி அருகே கஸ்தூரிபட்டி குண்ணிதேர்காடு பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது47). நெசவு தொழிலாளி. இவர், நேற்று மதியம் 1 மணி அளவில் தன்னுடைய நண்பர்களுடன் மோரூர் பெரிய ஏரிக்கு சென்று மீன்பிடித்ததாக கூறப்படுகிறது. அப்போது சீனிவாசனின் நண்பர்கள் குடிக்க தண்ணீர் வாங்கி வருவதாக கூறி சென்றனர்.
திரும்பி வந்து பார்த்த போது சீனிவாசனின் உடைகள் மட்டும் கரையில் இருந்தது. அவரை காணவில்லை. அவர் தண்ணீரில் மூழ்கி இறந்தது தெரிய வந்தது. தகவல் அறிந்த சங்ககிரி போலீசார், தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து சீனிவாசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சங்ககிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
Next Story