நாட்டு துப்பாக்கியுடன் விலங்குகளை வேட்டையாட சென்றவர் கைது


நாட்டு துப்பாக்கியுடன் விலங்குகளை வேட்டையாட சென்றவர் கைது
x

சொரகுளத்தூர் காப்புக்காட்டில் நாட்டு துப்பாக்கியுடன் விலங்குகளை வேட்டையாட சென்றவர் கைது செய்யப்பட்டார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட தேவனாம்பட்டு கிராமம் அருகே சொரகுளத்தூர் காப்பு காட்டில் மர்ம நபர்களால் வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதாக திருவண்ணாமலை வனச்சரக அலுவலர் சீனிவாசனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து அவரது தலைமையிலான வனத்துறையினர் சொரகுளத்தூர் காப்புக்காட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த கொண்டம் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் (வயது 29) என்பவரை வனத்துறையினர் சுற்றி வளைத்து பிடித்தனர்.

மேலும் அவருடன் இருந்த மற்றொரு நபர் அவரிடம் இருந்த நாட்டு துப்பாக்கியை கீழே வீசி விட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

இதையடுத்து பிரகாஷை வனத்துறையின் அவர்களது அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதையடுத்து 2 நாட்டு துப்பாக்கியையும் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து பிரகாசை கைது செய்தனர். மேலும் தப்பியோடிய நபரை தேடி வருகின்றனர்.


Next Story