அந்தியூர் அருகே நாட்டு துப்பாக்கி வைத்திருந்தவர் கைது


அந்தியூர் அருகே நாட்டு துப்பாக்கி வைத்திருந்தவர் கைது
x
தினத்தந்தி 28 Jun 2023 3:39 AM IST (Updated: 28 Jun 2023 4:39 PM IST)
t-max-icont-min-icon

அந்தியூர் அருகே நாட்டு துப்பாக்கி வைத்திருந்தவர் கைது

ஈரோடு

அந்தியூர்

அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதி தாமரைகரை கிராமத்தில் ஒரு வீட்டில் நாட்டு துப்பாக்கி பதுக்கி வைத்திருப்பதாக பர்கூர் தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன், கோவிந்தராஜ் ஆகியோர் தாமரைகரையில் உள்ள ராசு (வயது 45) என்பவருடைய வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது வீட்டுக்குள் நாட்டு துப்பாக்கி இருந்தது தெரிந்தது. இதையடுத்து போலீசார் ராசுவிடம் தீவிர விசாரணை நடத்தினர். அதில் விலங்குகளை வேட்டையாடுவதற்காக நாட்டு துப்பாக்கியை ராசு பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராசுவை கைது செய்தனர். மேலும் நாட்டு துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story