அனைத்து கூட்டமைப்பு தொழிற்சங்க நிர்வாகிகள் கூட்டம்


அனைத்து கூட்டமைப்பு தொழிற்சங்க நிர்வாகிகள் கூட்டம்
x
தினத்தந்தி 12 Jun 2023 12:15 AM IST (Updated: 12 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறையில் அனைத்து கூட்டமைப்பு தொழிற்சங்க நிர்வாகிகள் கூட்டம்

மயிலாடுதுறை


மயிலாடுதுறை மாவட்ட அனைத்து கூட்டமைப்பு தொழிற்சங்க நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் ஓய்வூதியம் பெறும் தொழிலாளர்களுக்கு மாதம்தோறும் பணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டுமான பொருட்களான மணல், கம்பி விலையை குறைத்த தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், நலவாரிய தலைவர் பொன்.குமாருக்கும் நன்றி தெரிவிப்பது. ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணை திறப்பதற்கு ஆணையிட்ட தமிழக முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவிப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் துணை தலைவர்கள் தியாகராஜன், சிவக்குமார், துணை செயலாளர்கள் ராஜகோபால், செல்வம், மகளிரணி செயலாளர் சாந்தி, மகளிரணி தலைவர் பூங்கோதை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story