திருச்செந்தூரில்இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் கூட்டம்
திருச்செந்தூரில்இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.
தூத்துக்குடி
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ரெயிலடி ஆனந்த விநாயகர் கோவில் வளாகத்தில் இந்து மக்கள் கட்சி ஒன்றிய நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, ஒன்றிய தலைவர் ராஜேஷ் தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட தலைவர் இசக்கிமுத்து, அனுமன் சேனா மாவட்ட தலைவர் தங்கராஜ் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
கூட்டத்தில், ஆகம விதிப்படிதான் கோவில் நடை திறக்க வேண்டும். ஆங்கில புத்தாண்டு தினத்தில் தமிழ் கடவுளான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் நடை நள்ளிரவு திறந்தால், இந்து மக்கள் கட்சி சார்பில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில், அனுமன் சேனா மாவட்ட செயலாளர் குணசேகரன், ஒன்றிய துணை தலைவர் சக்திகுமார், ஒன்றிய அமைப்பாளர் சிவலிங்கம், ஒன்றிய பொது செயலாளர் சிவக்குமார், ஒன்றிய அமைப்பு செயலாளர் முத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story