கிணற்றில் தவறி விழுந்து மனநலம் பாதித்தவர் சாவு


கிணற்றில் தவறி விழுந்து மனநலம் பாதித்தவர் சாவு
x

ராமநாதபுரத்தில் கிணற்றில் தவறி விழுந்து மனநலம் பாதித்தவர் இறந்தார்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் கண்ணன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் ராஜு. இவருடைய மகன் வெங்கடேஷ் (வயது37). மனவளர்ச்சி குன்றியவர். இவர் சம்பவத்தன்று அந்த பகுதியில் நடந்து சென்றபோது எதிர்பாராதவிதமாக கிணற்றில் தவறிவிழுந்தார். தண்ணீரில் மூழ்கி மூச்சு திணறி பலியானார். இதுபற்றி தகவல் அறிந்த ராமநாதபுரம் தீயணைப்புத்துறையினர் அங்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டனர். இதுகுறித்து ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Related Tags :
Next Story