கயத்தாறு அருகே விபத்தில் சிக்கிய மினிவேன் பள்ளத்தில் கவிழ்ந்து தீப்பிடித்து சேதம்
கயத்தாறு அருகே விபத்தில் சிக்கிய மினிவேன் பள்ளத்தில் கவிழ்ந்து தீப்பிடித்து பலத்த சேதம் அடைந்தது.
தூத்துக்குடி
கயத்தாறு:
மதுரையில் இருந்து திருவனந்தபுரத்திற்கு பழங்களை ஏற்றிக்கொண்டு லோடு வேன் ஒன்று வந்து கொண்டிருந்தது. ஆசூர் அருகே நாற்கர சாலையில் வந்தபோது, எதிர்பாராத விதமாக முன்னாள் சென்ற பார்சல் சர்வீஸ் டெம்போ வேனின் பின்னால் மோதி, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்தது. இதில் ஆப்பிள் ஆரஞ்சு மா, கொய்யா, சப்போட்டா உள்பட பழங்களுடன் சேர்ந்து வேனும் தீயில் கருகியது. தகவலறிந்த கோவில்பட்டி தீயணைப்பு துறையினர் வந்து தீ மேலும் பரவாமல் தடுத்தனர். ஆனாலும் வேன் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. டிரைவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இதுகுறித்து கயத்தாறு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story