மாற்றுத்திறனாளிகளுக்கான நடமாடும் சிகிச்சை வாகனம்


மாற்றுத்திறனாளிகளுக்கான நடமாடும் சிகிச்சை வாகனம்
x
தினத்தந்தி 20 Dec 2022 12:15 AM IST (Updated: 20 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தென்காசியில் மாற்றுத்திறனாளிகளுக்கான நடமாடும் சிகிச்சை வாகனத்தை கலெக்டர் ஆகாஷ் தொடங்கி வைத்தார்.

தென்காசி

மாற்றுத்திறனாளி குழந்தைகள் பயன்பெறும் வகையில் அவர்களின் இருப்பிடத்துக்கே சென்று தசை பயிற்சி, செயல்திறன் பயிற்சி, பேச்சு பயிற்சி, உதவி உபகரணங்களுக்கான மதிப்பீடு, விளையாட்டு முறையில் சிகிச்சை அளித்தல் மற்றும் மாற்றுத்திறனாளி நலத்துறையின் வாயிலாக மறுவாழ்வு திட்டங்கள் குறித்து கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற பணிகளுக்காக, இயன்முறை சிகிச்சை கருவிகளோடு கூடிய நடமாடும் சிகிச்சை பிரிவு வாகனத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாற்றுத்திறனாளிகள் தினத்தன்று வழங்கினார். இதைத்தொடர்ந்து தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று கலெக்டர் ஆகாஷ் மாற்றுத்திறனாளி குழந்தைகள் பயன்பெறும் வகையில் நடமாடும் சிகிச்சை பிரிவு வாகனத்தை பார்வையிட்டு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.


Next Story