வாகனம் மோதி கடமான் சாவு


வாகனம் மோதி கடமான் சாவு
x
தினத்தந்தி 21 May 2023 1:15 AM IST (Updated: 21 May 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon

வாகனம் மோதி கடமான் சாவு

நீலகிரி

கூடலூர்

கூடலூர் தாலுகா தேவாலாவில் இருந்து கூடலூர் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் கடமான் ஒன்று இறந்து கிடப்பதாக தேவாலா வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையொட்டி வனச்சரகர் சஞ்சீவி தலைமையிலான வனத்துறையினர் விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது வாகனத்தில் அடிபட்டு சுமார் 1½ வயதுடைய பெண் கடமான் இறந்து கிடப்பது தெரிய வந்தது. இது குறித்து மாவட்ட வன அலுவலர் கொம்மு ஓம்காரம் உத்தரவின் பேரில் உதவி வன பாதுகாவலர் கருப்பையா தலைமையில் முதுமலை கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் விரைந்து வந்து பிரேத பரிசோதனை செய்தனர். தொடர்ந்து கடமானின் உடல் புதைக்கப்பட்டது. இது குறித்து தேவாலா வனத்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story