கொடைக்கானலில் வீட்டுக்குள் புகுந்த கடமான்


கொடைக்கானலில் வீட்டுக்குள் புகுந்த கடமான்
x
தினத்தந்தி 27 Jun 2023 2:30 AM IST (Updated: 27 Jun 2023 2:31 AM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானலில் வீட்டுக்குள் புகுந்த கடமான் மீட்கப்பட்டது.

திண்டுக்கல்

கொடைக்கானல் மலைப்பகுதியில் காட்டெருமை, காட்டுப்பன்றி, புள்ளிமான், கடமான் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. கடந்த சில வாரங்களாக வனவிலங்குகள் நகர் பகுதிக்குள் நுழைந்து வருகின்றன. குறிப்பாக காட்டெருமை சர்வசாதாரணமாக நகரின் வீதிகளில் வலம் வந்து பொதுமக்களையும், சுற்றுலா பயணிகளையும் அச்சுறுத்தி வருவது தொடர்கதையாக உள்ளது.

இந்தநிலையில் நேற்று செண்பகனூர் அருகே உள்ள தைக்கால் பகுதியில் வசிக்கும் பவுல் என்பவரது வீட்டுக்குள் கடமான் புகுந்தது. இதுகுறித்து பவுல், கொடைக்கானல் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் வனத்துறை ஊழியர்கள் அங்கு சென்று, வீட்டுக்குள் புகுந்த கடமானை பிடித்தனர். பின்னர் அந்த கடமான் வனத்துறை வாகனத்தில் ஏற்றப்பட்டு, அப்சர்வேட்டரியை அடுத்த குண்டாறு பகுதியில் உள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் விடப்பட்டது.


Next Story