கேட்பாரற்று நின்ற மொபட்; போலீசார் விசாரணை


கேட்பாரற்று நின்ற மொபட்; போலீசார் விசாரணை
x

உவரி அருகே கேட்பாரற்று நின்ற மொபட் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருநெல்வேலி

திசையன்விளை:

உவரி அருகே இடையன்குடி-ஆனைகுடி விலக்கில் பல நாட்களாக மொபட் கேட்பாரற்று நிறுத்தப்பட்டு உள்ளதாக உவரி போலீசுக்கு அந்த பகுதியினர் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் மொபட்டை போலீஸ் நிலையத்துக்கு எடுத்துச் சென்றனர். மொபட் யாருடையது, யார் விட்டு சென்றது, அதற்கான காரணம் என்ன? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story