ஏற்காடு அடிவாரத்தில்இறந்த குட்டியுடன் சுற்றும் தாய் குரங்கு


ஏற்காடு அடிவாரத்தில்இறந்த குட்டியுடன் சுற்றும் தாய் குரங்கு
x
தினத்தந்தி 16 Jun 2023 8:47 PM GMT (Updated: 17 Jun 2023 10:09 AM GMT)
சேலம்

கன்னங்குறிச்சி

ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும் ஏற்காட்டில் உள்ள மலைப்பகுதிகளில் ஏராளமான காட்டெருமை, மான், கேளை ஆடு, காட்டு பன்றி, குரங்கு உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் உள்ளன. தற்போது ஏராளமான குரங்குகள் மலை அடிவாரத்தில் உள்ள குடியிருப்பு மற்றும் அங்குள்ள பள்ளிகள் இருக்கும் பகுதியில் சுற்றி வருகின்றது. கடந்த சில நாட்களாக இறந்து அழுகிய நிலையில் உள்ள குட்டியுடன் தாய் குரங்கு அடிவார பகுதியில் சுற்றி வருகிறது. அந்த தாய் குரங்கு அழுகிய ஈக்கள் மொய்க்கும் நிலையில் கண்வெளியே வந்த நிலையில் உள்ள குட்டிக்கு உயிர் கொடுக்க உதட்டோடு வாய்வைத்து ஊதுவதும், மேலும் அதன் மீது காது வைத்து பார்ப்பதும், பிறகு தூக்கி கொண்டு ஓடுவதுமாக இருந்து வருகிறது. விலங்குகளின் தாய் பாசம் கண்டு அங்கிருந்த பொது மக்கள் வியந்து பார்த்து செல்கின்றனர்.


Next Story