மகளை காப்பாற்ற முயன்ற தாய் மின்சாரம் தாக்கி பலி
ஆலங்குளம் அருகே மகளை காப்பாற்ற முயன்ற தாய் மின்சாரம் தாக்கி பலியானார்.
தென்காசி
ஆலங்குளம்:
ஆலங்குளம் அருகே உள்ள மாறாந்தையை சேர்ந்தவர் நிறைகுளத்தான் மனைவி வசந்தி (வயது 35). இவர்களுக்கு மனிஷா (14), அபிஷா (10) குழந்தைகள் உள்ளது. நேற்று வசந்தி, மனிஷாவுடன் மாட்டுத்தொழுவிற்கு சென்றார். அப்போது அருகில் இருந்த மின்கம்பியை மனிஷா தொட்டாள். அதில் திடீரென மின்சாரம் பாய்ந்ததில் அவள் உயிருக்கு போராடி கொண்டிருந்தாள். இதனை கண்ட வசந்தி தனது மகளை காப்பாற்ற ஓடிச் சென்று தள்ளி விட்டார். ஆனால் அப்போது வசந்தியின் மேல் மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர் மயங்கினார்.
உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஆலங்குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு வசந்தியை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story