சாலை மைய தடுப்பில் மோட்டார் சைக்கிள் மோதிபெங்களூரு வாலிபர் பலி


சாலை மைய தடுப்பில் மோட்டார் சைக்கிள் மோதிபெங்களூரு வாலிபர் பலி
x

பொற்றையடி அருகே சாலை மைய தடுப்பில் மோட்டார் சைக்கிள் மோதி பெங்களூரு வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

கன்னியாகுமரி

தென்தாமரைக்குளம்:

பொற்றையடி அருகே சாலை மைய தடுப்பில் மோட்டார் சைக்கிள் மோதி பெங்களூரு வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

பெங்களூரூ வாலிபர்

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் ராகேஷ் (வயது24). இவர் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு குமரி மாவட்டம் மங்கலக்குன்று புளிநின்னவிளையை சேர்ந்த உறவினர் வேணுகோபால் (34) என்பவரது வீட்டுக்கு வந்தார். இவர்கள் இருவரும் நேற்று அதிகாலையில் சூரிய உதயம் பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் கன்னியாகுமரிக்கு புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை ராகேஷ் ஓட்டி சென்றார். வேணுகோபால் பின்னால் அமர்ந்திருந்தார்.

அவர்கள் பொற்றையடி அருகே உள்ள இலங்காமணிபுரம் புறவழிச்சாலையில் வந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாலை மைய தடுப்பில் மோதியது. இதில் ராகேசின் தலையில் பலத்த அடிப்பட்டது.

அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஒரு காரில் ஏற்றி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர்.

பரிதாப சாவு

அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்தில் வேணுகோபால் காயமின்றி உயிர் தப்பினார். இதுகுறித்து அவர் தென்தாமரைகுளம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

உறவினர் வீட்டிற்கு வந்த இடத்தில் விபத்தில் சிக்கி பெங்களூரு வாலிபர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story