சிவகிரி அருகே மலைப்பாம்பு பிடிபட்டது


சிவகிரி அருகே மலைப்பாம்பு பிடிபட்டது
x

சிவகிரி அருகே 1௦அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது.

தென்காசி

சிவகிரி:

சிவகிரி தாலுகாவில் உள்ள தனியார் சர்க்கரை ஆலை வளாகத்தில் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று புகுந்தது. இதுகுறித்த தகவல் அறிந்ததும் வாசுதேவநல்லூர் தீயணைப்பு நிலைய அலுவலர் ஷேக் அப்துல்லா தலைமையில் வீரர்கள் விரைந்து சென்று மலைப்பாம்பை உயிருடன் பிடித்து வனவர் குமாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் வனச்சரக அலுவலர் கார்த்திக்கேயன் தலைமையில் வனக்காப்பாளர் கோட்டூர் சாமி, வேட்டை தடுப்பு காவலர் அய்யாத்துரை ஆகியோர் பிடித்துச் சென்று வாசுதேவநல்லூர் செல்லுப்புளி பீட் வட்டக்கன்னி சராகம் பகுதியில் மலைப்பாம்பை விட்டனர்.


Next Story