பார்வையாளர்களை கவர்ந்த ராணுவ வீரர்களின் இசை நிகழ்ச்சி


பார்வையாளர்களை கவர்ந்த ராணுவ வீரர்களின் இசை நிகழ்ச்சி
x
தினத்தந்தி 5 April 2023 12:15 AM IST (Updated: 5 April 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

பார்வையாளர்களை கவர்ந்த ராணுவ வீரர்களின் இசை நிகழ்ச்சி

நீலகிரி

குன்னூர்

குன்னூர் அருகே உள்ள வெலிங்டனில் எம்.ஆர்.சி. என்று அழைக்கப்படும் மெட்ராஸ் ரெஜிமெண்டல் சென்டர் செயல்பட்டு வருகிறது. இந்த ராணுவ பயிற்சி மையத்தில் இளம் ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பயிற்சி முடித்த ராணுவ வீரர்கள் எல்லை புறங்களுக்கு பாதுகாப்பு பணிக்கு அனுப்பப்படுகின்றனர். மேலும் இவர்களுக்கு பேண்ட் வாத்தியம் இசைக்கவும் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் ஆங்கிலேயர் காலத்தில் 200 ஆண்டுகளுக்கு முன்பில் இருந்து பேக் பைப்ஸ் எனப்படும் இசைகருவி தற்போதும் இசைக்கப்பட்டு வருகிறது. 1600-ம் ஆண்டுகளில் ஸ்காட்லாந்து ரெஜிமென்ட் பிரிவுகளில் பயன்படுத்தப்பட்ட இந்த இசைகருவி தற்போதும் குன்னூர் ராணுவ வீரர்கள் குழுவினரால் இசைக்கப்பட்டு வருகிறது.

எம்.ஆர்.சி. ராணுவ இசைக்குழுவினர் கடந்த ஜனவரி மாதம் 26-ந் தேதி டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்குபெற்று பேண்ட் வாத்திய இசை இசைத்து 2-ம் இடம் பிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ராணுவ கல்லூரியில் பயிற்சி பெறும் முப்படை அதிகாரிகள் பயிற்சி முடிவுற்ற பின்னர் அவர்களுக்கு பிரிவு உபசார விழா வெலிங்டன் ஜிம்கானா மைதானத்தில் நடைபெறுவது வழக்கம். இதன்படி இந்த ஆண்டு பயிற்சி முடித்தவர்களுக்கு பிரிவு உபசார விழா நடைபெற்றது. இதையொட்டி கடந்த 2-ந் தேதி குதிரை சாகச நிகழ்ச்சி நடந்தது.

நேற்று எம்.ஆர்.சி. ராணுவ பேண்ட் வாத்திய குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பேக் பைப்ஸ் எனப்படும் இசையை ராணுவ வீரர்கள் உடலை அசைத்து நடனமாடியபடி அணிவகுத்து சென்றனர்.

இதுபார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் அந்த வழியாக சுற்றுலா பயணிகளும் ராணுவ வீரர்களின் இசை நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர்.


Next Story