அங்கன்வாடி மையங்களுக்கு புதிய கட்டிடம் கட்டப்படும்


அங்கன்வாடி மையங்களுக்கு புதிய கட்டிடம் கட்டப்படும்
x
தினத்தந்தி 20 Jan 2023 12:15 AM IST (Updated: 20 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

வாழ்குடி,ராராந்திமங்கலம் ஊராட்சிகளில்அங்கன்வாடி மையங்களுக்கு புதிய கட்டிடம் கட்டப்படும் என முகமது ஷா நவாஸ் எம்.எல்.ஏ. உறுதி அளித்தார்.

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

திருமருகல் ஒன்றியத்திற்கு உட்பட்ட வாழ்குடி, கங்களாஞ்சேரி, ராராந்திமங்கலம் ஆகிய ஊராட்சிகளில் மக்கள் குறை தீர்ப்பு முகாம்களை நடத்தி பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. பெற்றார். அப்போது மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.வாழ்குடி மற்றும் ராராந்திமங்கலம் ஊராட்சிகளில் பழுதடைந்த நிலையில் உள்ள அங்கன்வாடி மையங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அங்கன்வாடி மையங்களுக்கு புதிய கட்டிடம் கட்டப்படும் என்று உறுதியளித்தார். இந்த ஆய்வின் போது திருமருகல் தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் சரவணன், ஊராட்சி மன்ற தலைவர்கள் அகிலாண்டேஸ்வரி விநாயகசுந்தரம், சுந்தரராஜன், ரேணுகாதேவி, மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


Next Story