புதிதாக சத்துணவு கூடம் கட்டித்தர வேண்டும்
அழிஞ்சமங்கலம் அரசு ஆரம்ப பள்ளியில் புததிாக சத்துணவு கூடம் கட்டித்தர வேண்டும் என மேலாண்மை குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அழிஞ்சமங்கலம் அரசு ஆரம்ப பள்ளியில் புததிாக சத்துணவு கூடம் கட்டித்தர வேண்டும் என மேலாண்மை குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பள்ளி மேலாண்மை குழு கூட்டம்
நாகை அருகே அழிஞ்சமங்கலம் அரசு ஆரம்ப பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு பள்ளி மேலாண்மை குழு தலைவர் ராஜதிலகம் தலைமை தாங்கினார்.ஆசிரியர் அன்புச்செல்வன் வரவேற்றார். செயலாளரும் தலைமை ஆசிரியையுமான சித்ரா தீர்மானங்களை முன்மொழிந்தார்.
கல்வியாளர் முத்துலட்சுமி மாணவர்கள் கல்விநலன் வரும் கல்வியாண்டில் சேர்க்கையை அதிகரிக்க எடுக்கும் நடவடிக்கையை பற்றி கூறினார். இதில் மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
புதிதாக சமையல் கூடம்
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
இந்த பள்ளியில் சேதமடைந்த சமையல் கூட கட்டிடத்தை கலெக்டர் அருண் தம்புராஜ் ஆய்வு செய்து புதிய கட்டிடம் கட்டித் தர வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு பரிந்துரை செய்தும் தற்போது எந்த பணிகளும் நடக்கவில்லை. புதிதாக சமையல் கூடம் கட்டிடத்தர மீண்டும் கலெக்டரிடம் மனு அளிக்க வேண்டும்.
2023-24-ம் கல்வி ஆண்டில் பள்ளியின் சிறப்பம்சங்களை எடுத்துக் கூறும் விதமாக பேரணி நடத்தி மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும். பள்ளி துப்புரவு பணியாளர்களுக்கு ஊதியம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இருந்து உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
முடிவில் ஆசிரியர் ஆனந்த ராஜ் நன்றி கூறினார்.