புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை


புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x

புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

திருப்பூர்

வெள்ளகோவில்

வெள்ளகோவிலில் திருமணமான 5 மாதத்தில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

புதுப்பெண்

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் டி.ஆர். நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது45). இவர் ஓட்டல் நடத்தி வருகின்றார். இவரது மகள் சந்தியா (21). இவருக்கும் கோவை கணபதி பகுதியை சேர்ந்த வினோத்குமார் (27) என்பவருக்கும் திருமண தகவல் மையம் மூலமாக கடந்த மார்ச் மாதம் 21-ந் தேதி வெள்ளகோவில் அருகே உள்ள மயில்ரங்கம் வைத்தியநாத சுவாமி கோவிலில் திருமணம் நடைபெற்றது.

அதன் பிறகு சந்தியாவும், வினோத்குமார் இருவரும் கோவையில் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து குடியிருந்து வந்தனர். இந்த நிலையில் சந்தியாவிற்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கடந்த 8-ந் தேதி கோவையில் இருந்து கரூர் அழைத்து சென்று அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சந்தியா சிகிச்சை பெற்று வந்தார். அதன்பின்னர் அவர் வெள்ளகோவிலில் உள்ள பெற்றோர் வீட்டில் இருந்தார்‌.

தற்கொலை

இந்த நிலையில் நேற்று காலை சந்தியாவின் பெற்றோர் ஓட்டலுக்குசென்று விட்டனர். இதனால் சந்தியா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். பின்னர் வீட்டிற்கு மதியம் பெற்றோர் வந்து பார்க்கும் போது ஜன்னல் கம்பியில் சேலையால் சந்தியா தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்ேறார் சந்தியாவை மீட்டு உடனடியாக தனியார் ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சந்தியாவை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து காங்கயம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன், சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சந்தியாவுக்கு திருமணமாகி 5 மாதம் மட்டும் ஆவதால் தாராபுரம் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. வீட்டில் தனியாக இருந்த புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story