போலீஸ் துப்பறியும் பிரிவிற்கு புதிய நாய்க்குட்டி
போலீஸ் துப்பறியும் பிரிவிற்கு புதிய நாய்க்குட்டி வாங்கப்பட்டது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட போலீஸ் மோப்பநாய் பிரிவில் இருந்த ஜூலி என்ற துப்பறியும் நாய் பணியில் இருந்து ஓய்வு பெற்றது. அதற்கு பதிலாக புதிதாக நாய்க்குட்டி ஒன்று துப்பறிவு நாய் பிரிவிற்கு வாங்கப்பட்டுள்ளது. இதனுடைய பயிற்சி பொறுப்பாளர்கள் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் ஏட்டு ராஜா ஆகியோர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜிடம் அழைத்து வந்தனர்.
தொடர்ந்து அந்த நாய் குட்டிக்கு டயானா என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் பெயர் சூட்டினார். பின்னர் அவர் கூறும் போது,
இந்த நாய்க்குட்டிக்கு 6 மாத காலம் சிவகங்கை மோப்பநாய் படை பிரிவில் அடிப்படை பயிற்சி அளிக்கப்படவுள்ளது. அதன் பின்னர் சென்னை பரங்கி மலையில் உள்ள பயிற்சி நிலையத்தில் மேல் பயிற்சியும் அளிக்கப்படும். அத்துடன் இந்த நாய்க்குட்டிக்கு வெடிகுண்டுகளை கண்டறியும் பயிற்சியும் அளிக்கப்படும் என்றார்.
Related Tags :
Next Story