பூம்புகாா் அருகே புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டது
தினத்தந்தி செய்தி எதிரொலியாக பூம்புகார் அருகே புதிய மி்ன்மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
திருவெண்காடு:
தினத்தந்தி செய்தி எதிரொலியாக பூம்புகார் அருகே புதிய மி்ன்மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
பழுதடைந்த மின்மாற்றி
பூம்புகார் அருகே நெய்த வாசல் வடபாதி மற்றும் தென்பாதி கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த குடியிருப்புகளுக்கு மின்சார விநியோகம் செய்ய தனியாக வடபாதியில் ஒரு மின்மாற்றி உள்ளது. இந்த டிரான்ஸ்பார்மர் கடந்த ஒரு ஆண்டாக பழுதடைந்து காணப்படுகிறது.இந்த மின்மாற்றியில் உள்ள 2 தூண்களில் சிெமண்டு காைரகள் ெபயர்ந்து இரும்பு கம்பிகள் வெளி தெரிந்ததால் எந்த நேரத்திலும் சாய்ந்து விழும் அபாய நிலையில் இருந்தது. இதை அகற்றி விட்டு புதிய மின்மாற்றி அமைக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
புதிதாக அமைக்கப்பட்டது
இதுகுறித்து 'தினத்தந்தி' நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக பூம்புகார் மின்வாரிய உதவி பொறியாளர் சரவணன், ஆக்க முகவர் சேகர் ஆகியோர் தலைமையிலான மின்வாரிய ஊழியர்கள் பழுதடைந்த மின் கம்பங்களை அகற்றிவிட்டு புதிய மின் கம்பங்களை பொருத்தி மின்மாற்றி அமைத்தனர்.மக்கள் நலன் கருதி உடனடியாக புதிய மி்ன்மாற்றி அமைத்து தந்த மின்வாரிய அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி'' நாளிதழுக்கும் காவேரி பூம்பட்டினம் ஊராட்சி தலைவர் சசிகுமார் மற்றும் அந்த பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.