விவசாயி வீட்டில் புகுந்த நல்லப்பாம்பு


விவசாயி வீட்டில் புகுந்த நல்லப்பாம்பு
x

சென்னாவரம் கிராமத்தில் விவசாயி வீட்டில் புகுந்த நல்லப்பாம்பை தீயணைப்பு துறையினர் பிடித்தனர்

திருவண்ணாமலை

வந்தவாசி

வந்தவாசி அருகே சென்னாவரம் கிராமம் ரோடுத்தெருவை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் (வயது 59), விவசாயி. இவரது வீட்டின் சமையல் அறையில் 5 அடி நீளமுள்ள நல்லப்பாம்பு இன்று திடீரென புகுந்தது.

இதனை கண்ட ஹரிகிருஷ்ணன் உடனடியாக வந்தவாசி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து ஒரு மணி நேரம் போராடி நல்லப்பாம்பை பிடித்து அருகில் உள்ள புலிவாய் காப்புக்காட்டில் விட்டனர்.


Next Story