ரெயிலில் இருந்து தவறி விழுந்து வடமாநில தொழிலாளி பலி
ரெயிலில் இருந்து தவறி விழுந்து வடமாநில தொழிலாளி பலியானார்.
ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் அருகே ஓடும் ரெயிலில் தவறி விழுந்து மேற்கு வங்காளம் மாநில கட்டிட தொழிலாளி அடிப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
மேற்கு வங்காளம் ஜில்பிகுரி பகுதியைச் சேர்ந்தவர் குமார் தாமங் (வயது 44), கட்டிட தொழிலாளி. இவர் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் கட்டிட வேலை செய்வதற்காக மேற்கு வங்காள மாநிலம் ஜெல்பிகுறி ரெயில் நிலையத்திலிருந்து கேரள மாநிலம் எர்ணாகுளம் வரை செல்லும் கன்னியாகுமரி சிறப்பு ரெயிலில் பயணம் செய்தார்.
வாணியம்பாடி- கேத்தாண்டப்பட்டி ரெயில் நிலையங்களுக்கு இடையே ரெயில் சென்றபோது, ரெயில் படிக்கட்டில் பயணம் செய்த குமார் தாமங், ரெயிலில் இருந்து தவறி கீழே விழுந்து, தலையில் அடிபட்டு சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் ஏட்டு உஷாராணி சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது குறித்து போலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.