தேவூர் அருகே கதவணையில் தேனீக்கள் கொட்டியதில் வடமாநில தொழிலாளி பலி


தேவூர் அருகே கதவணையில் தேனீக்கள் கொட்டியதில் வடமாநில தொழிலாளி பலி
x

தேவூர் அருகே கதவணையில் தேனீக்கள் கொட்டியதில் வடமாநில தொழிலாளி பலியானார்.

சேலம்

தேவூர்:

தேவூர் அருகே ஊராட்சி கோட்டை நீர்மின்தேக்க கதவணை பகுதியில் கடந்த ஜனவரி மாதம் முதல் பராமரிப்பு பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியில் பீகார் மாநிலம் பாகல்பூர் பகுதியை சேர்ந்த அயாஸ்உதின் (வயது 65) என்பவர் ஒப்பந்த தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் அவர் நேற்று காலை வழக்கம் போல கதவணை பகுதியில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது கதவணை பகுதியில் கூடுகட்டியிருந்த தேனீக்கள் பறந்து வந்து அவரை கொட்டியது. இதில் அயாஸ்உதின் மயங்கி விழுந்தார், அப்போது அவருடன் வேலை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அயாஸ்உதினை மீட்டு குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தேவூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story