கட்டுமான பணியில் ஈடுபட்டு இருந்த வடமாநில தொழிலாளி மர்ம சாவு

கட்டுமான பணியில் ஈடுபட்டு இருந்த வடமாநில தொழிலாளி மர்ம சாவு
x
தினத்தந்தி 16 Jun 2023 12:15 AM IST (Updated: 16 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறையில், புதிய மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டுமான பணியில் ஈடுபட்டு இருந்த வடமாநில தொழிலாளி மர்மமான முறையில் இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறையில், புதிய மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டுமான பணியில் ஈடுபட்டு இருந்த வடமாநில தொழிலாளி மர்மமான முறையில் இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வடமாநில தொழிலாளி

மயிலாடுதுறையில் புதிய மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டுமான பணி நடந்து வருகிறது. இந்த பணியில் மேற்கு வங்க மாநிலம் நாராயணன் தரி அருகே மல்காரபுர்புரா கிராமத்தை சேர்ந்த ராஜா (வயது 46) என்பவர் ஈடுபட்டு வந்தார்.

நேற்று முன்தினம் தொழிலாளி ராஜா, புதிய கலெக்டர் அலுவலக கட்டிட வளாகத்தில் உள்ள கழிவறை அருகே மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனைக் கண்ட சக தொழிலாளர்கள் மற்றும் ஒப்பந்த நிறுவனத்தில் பணியாற்றும் நிர்வாகிகள், மயங்கி கிடந்த ராஜாவை மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

சந்தேக மரணம்

அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே ராஜா இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து நாமக்கல்லை சேர்ந்த தனியார் கட்டுமான நிறுவன மேற்பார்வையாளர் நரேந்திரன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் சந்தேக மரணம் என்ற அடிப்படையில் வழக்கு பதிவு செய்தனர்.

இது தொடர்பாக வட மாநில தொழிலாளி இறப்புக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story