தற்காலிக கொட்டகையில் இயங்கும் சத்துணவு சமையல் கூடம்


தற்காலிக கொட்டகையில் இயங்கும் சத்துணவு சமையல் கூடம்
x

தற்காலிக கொட்டகையில் இயங்கும் சத்துணவு சமையல் கூடம்

திருவாரூர்

மன்னார்குடி

சவளக்காரன் கிராமத்தில் தற்காலிக கொட்டகையில் இயங்கும் சத்துணவு சமையல் கூடத்திற்கு நிரந்தர கட்டிடம் கட்டித்தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தற்காலிக கொட்டகையில் சமையல் கூடம்

மன்னார்குடியை அடுத்த சவளக்காரன் ஊராட்சியில் அரசு ஆதிதிராவிடர் தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியின் சத்துணவு கூடம் கஜா புயலின் போது சேதம் அடைந்தது. சேதமடைந்த கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய சத்துணவு கூடம் கட்ட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் இதுவரை புதிய கட்டிடம் கட்டப்படாமல் உள்ளது. இதனால் சத்துணவு சமைக்க இடம் இல்லாததால் தற்காலிக கொட்டகையில் சமையல் செய்யப்பட்டு வருகிறது.

நிரந்தர கட்டிடம்

இதனால் குழந்தைகளுக்கு வழங்கும் உணவில் சுகாதாரம் இல்லாமலும், போதிய பராமரிப்பு இல்லாத நிலையும் உள்ளது. இதன் மூலம் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படலாம் என பெற்றோர் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சவளக்காரன் கிராமத்தில் தற்காலிக கொட்டகையில் இயங்கும் சத்துணவு சமையல் கூடத்திற்கு நிரந்தர கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமமக்கள் எதிர்பார்க்கின்றனர்.


Next Story