இளம் சிறார் இல்லங்கள் குறித்து ஆய்வு செய்ய ஒரு நபர் குழு அமைப்பு


இளம் சிறார் இல்லங்கள் குறித்து ஆய்வு செய்ய ஒரு நபர் குழு அமைப்பு
x
தினத்தந்தி 16 May 2023 5:41 PM IST (Updated: 16 May 2023 5:48 PM IST)
t-max-icont-min-icon

இளம் சிறார் இல்லங்கள் குறித்து ஆய்வு செய்ய ஒரு நபர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு இளம் சிறார் இல்லங்கள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி ஒரு நபர் குழுவை அமைத்துள்ளது. அக்குழு 2015-ம் வருட இளம் சிறார் சட்டத்தின்கீழ் செயல்படும் சிறப்பு இல்லங்கள், கூர்நோக்கு இல்லங்கள், பாதுகாக்கப்பட்ட பகுதிகளின் உறைவிட வாசிகளின் நிர்வாகம், உள்கட்டமைப்பு, உடல் நலன் மற்றும் மருத்துவ வசதிகள், பயிற்சி மற்றும் திறன் கட்டமைத்தல், உணவு மற்றும் ஊட்டச்சத்து, பணியாளர்கள், அக்கறை கொண்ட நிறுவனங்களின் பங்கு, பின் கவனிப்புப் பிரச்சனைகள், இளம் சிறார் நீதி சட்டம் மற்றும் அதன் விதிகள் குறித்த திருத்தங்கள் இவை பற்றி ஆராயும்படி குழுவை பணித்துள்ளது.

இப்பொருள் குறித்து அக்கறை உள்ளவர்கள் / நிறுவனங்கள் விருப்பப்பட்டால் தங்களது கருத்துக்களையும் பரிந்துரைகளையும் ஒரு நபர் குழு 147. கச்சேரி சாலை, மயிலாப்பூர், சென்னை 600004 என்ற விலாசத்திற்கு அனுப்பி வைக்கலாம். chandruonjuvenilehome@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். நேரில் சந்திக்க விரும்புவோர் வேலை நாட்களில் மதியம் 03.00 மணி முதல் 05.00 மணி வரை மேற்கண்ட விலாசத்திற்கு வரலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story