மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கலைநிகழ்ச்சி
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கலைநிகழ்ச்சி
கோத்தகிரி
நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தாமோதரன் உத்தரவின்படி கோத்தகிரி காமராஜர் சதுக்கம் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் கோத்தகிரி நகரில் பகல் நேர மையத்தில் சேர்ந்து பயிலும் மாற்றுத்திறனாளி குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதற்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாவட்ட உதவி திட்ட அலுவலர் குமார் தலைமை தாங்கினார். இதில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் பேச்சு, பாட்டு, நாடகம், நடன நிகழ்ச்சி மற்றும் மாறுவேட போட்டியில் பங்கேற்று திறன்களை வெளிப்படுத்தினர்.
இதேபோன்று குண்டாடா, ஒரசோலை, அரவேனு, கெரடாமட்டம் உள்ளிட்ட அரசு பள்ளி குழந்தைகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியை மோர்ச்சா மேரி வரவேற்றார். இதில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரியா, சமூக சேவகி ரேவதி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் ராஜ்குமார், இயன்முறை மருத்துவர் திவ்யா, இணைந்து இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் ஆனந்தன், உடற்கல்வி ஆசிரியர் மாதேஷ், குண்டாடா பள்ளி தலைமை ஆசிரியர் நஞ்சுண்டன் மற்றும் பலர் கலந்துக்கொண்டனர். முடிவில் சிறப்பு ஆசிரியர் மங்களவல்லி நன்றி கூறினார்.