போதை பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கலை நிகழ்ச்சி


போதை பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கலை நிகழ்ச்சி
x

வாணியம்பாடி பகுதியில் போதை பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது.

திருப்பத்தூர்

வாணியம்பாடி தாலுக்காவிற்கு உட்பட்ட கிராமங்களில் தமிழக அரசு ஆணைக்கிணங்க, கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வழிகாட்டுதல்படி, வாணியம்பாடி தாசில்தார் சாந்தி தலைமையில், மண்டல துணை தாசில்தார் விமல் மோகன் கணேஷ், வருவாய் ஆய்வாளர்கள் விஸ்வநாதன், புருஷோத்தமன் ஆகியோர் கொண்ட குழு மற்றும் கலால் உதவி ஆணையரால் ஏற்பாடு செய்யப்பட்ட கலைக்குழு மூலம் போதைப்பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள்குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது.

வாணியம்பாடி டவுன், உதயேந்திரம் பேரூராட்சி, ஜாப்ராபாத், பள்ளிப்பட்டு கூட்ரோடு, அம்பலூர், தும்பேரி, வெலதிகமாணி பெண்டா, ஆலங்காயம் பஸ் நிலையம், நிம்மியம்பட்டு, கொத்த கோட்டை உள்ளிட்ட பல்வேறு கிராமபகுதிகளில் வருவாய்த் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் மூலம் நடந்த இந்த நிகழ்ச்சியில் சாராயம் மற்றும் போதைப்பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களிடையே கலை நிகழ்ச்சி வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம உதவியாளர் பாலாஜி உள்பட பலர் உடன் இருந்தனர்.


Next Story