நான்கு வழிச்சாலையில் இரும்பு தளவாடங்கள் திருடியவர் கைது


நான்கு வழிச்சாலையில் இரும்பு தளவாடங்கள் திருடியவர் கைது
x

நான்கு வழிச்சாலையில் இரும்பு தளவாடங்கள் திருடியவர் கைது

திருப்பூர்

போடிப்பட்டி

நான்கு வழிச்சாலை பணிகளுக்கு பயன்படுத்தும் இரும்புத் தளவாடங்களை திருடியவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து திருட்டுக்கு பயன்படுத்திய சரக்கு ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.

ஒப்பந்ததாரர்கள்

மத்திய அரசின் பாரத் மாலா பரியோஜனா திட்டத்தில் பொள்ளாச்சி -திண்டுக்கல் கமலாபுரம் இடையே நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ரூ. 3 ஆயிரத்து 649 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் பணிகள் தனியார் ஒப்பந்ததாரர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் சாலை அமைக்கும் பணிகளுடன் முக்கிய சந்திப்புகளில் பாலங்கள் அமைப்பது, மழைநீர் வடிகால்கள் அமைப்பது உள்ளிட்ட பணிகளும் நடைபெற்று வருகிறது.

பெரும்பாலும் ஊருக்கு ஒதுக்குப்புறமான பகுதிகளில் மேற்கொள்ளப்படும் சாலைப்பணிகளின் போது ஒருசில இடங்களில் இரும்பு தளவாடப்பொருட்கள் அவ்வப்போது திருடப்படுவது ஒப்பந்ததார்களுக்கு தலைவலியாக உள்ளது. அந்தவகையில் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் மடத்துக்குளத்தையடுத்த மைவாடி பகுதியில் இரும்பு பிளேட்டுகள், கம்பிகள், ஜாக்கிகள் உள்ளிட்ட ரூ.1½ லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருடப்பட்டன. இதுகுறித்து போலீசாரிடம் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.அவர்களிடமிருந்து திருடப்பட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டது.

ஒருவர் கைது

இதேபோன்ற ஒரு சம்பவம் உடுமலையையடுத்த பாலப்பம்பட்டி பகுதியில் நடைபெற்றுள்ளது. சம்பவத்தன்று அதிகாலையில் தேசிய நேடுஞ்சாலை பணிகளுக்காக பயன்படுத்திய இரும்புப் பொருட்களை மர்ம நபர் ஒருவர் சரக்கு ஆட்டோவில் ஏற்றிக் கொண்டிருந்தார்.அப்போது அங்கு வந்த ஒப்பந்ததாரர் பொதுமக்கள் உதவியுடன் அவரைப் பிடித்து உடுமலை போலீசில் ஒப்படைத்தார். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் திண்டுக்கல் மாவட்டம் பேகம்புதூர் பகுதியைச் சேர்ந்த அப்துல்காதர் என்பவரது மகன் காஜாமொய்தீன் (வயது 37) என்பது தெரிய வந்தது.அவரைக் கைது செய்த போலீசார் அவரிடமிருந்து திருட்டுக்கு பயன்படுத்திய சரக்கு ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.



Next Story