வாலிபர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு
வாலிபர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு
திருப்பூர்
பல்லடம் அருகே கணபதிபாளையம் பகுதியில் வசித்து வருபவர் பார்த்தீபன் (வயது 32). இவர் கடந்த அக்டோபர் மாதம் 14-ந் தேதி இரவு சென்னிமலைபாளையத்தில் உள்ள மைதானத்தில் தனது சகோதரருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு மங்கலம் வெள்ளஞ்செட்டிப்பாளையத்தை சேர்ந்த விக்னேஸ்வரன் (26) மற்றும் நண்பர்கள் 2 பேர் மது அருந்திக்கொண்டிருந்தனர்.
அவர்கள் திடீரென்று பார்த்தீபனை தகாத வார்த்தையால் திட்டி தாக்கியத்துடன் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து ரூ.ஆயிரத்தை பறித்தனர். காயமடைந்த பார்த்தீபன் பல்லடம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அவர் அளித்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேஸ்வரன் உள்ளிட்ட 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
விக்னேஸ்வரன் மீது ஏற்கனவே வழிப்பறி வழக்கு, அடிதடி வழக்கு, கொலைமுயற்சி வழக்கு, கஞ்சா வழக்கு ஆகியவை உள்ளன. எனவே தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் விக்னேஸ்வரனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் கலெக்டருக்கு பரிந்துரைத்தார். கலெக்டர் வினீத் உத்தரவுப்படி குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பதற்கான உத்தரவு, கோவை சிறையில் உள்ள விக்னேஸ்வரனிடம், பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு சவுமியா வழங்கினார்.