விழுப்புரம் அருகேஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்தவர் படுகாயம்ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதி


விழுப்புரம் அருகேஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்தவர் படுகாயம்ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதி
x
தினத்தந்தி 23 Jan 2023 12:15 AM IST (Updated: 23 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் அருகே ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்தவர் படுகாயமடைந்தாா்.

விழுப்புரம்


காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த நந்திவரம் பெரியார் நகரை சேர்ந்தவர் அப்துல் காதர் மகன் மதர் (வயது 53). இவர் நேற்று காலை புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி செல்லும் ரெயிலில், சென்னைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது கண்டமங்கலம் போலீஸ் சரகம் சடையாண்டி குப்பத்தில் சென்று கொண்டிருந்த போது, மதர் ரெயிலில் இருந்து தவறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.

இதில் அவர் படுகாயங்களுடன் கிடந்ததை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்தனர். உடனே இதுகுறித்து கண்டமங்கலம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று, ஆம்புலன்ஸ் வாகனத்தில் அவரை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். மதர், ரெயிலில் இருந்து தவறி விழுந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் விழுப்புரம் இருப்புப்பாதை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story