உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடுவராக நாகர்கோவிலை சேர்ந்தவர் நியமனம்
உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடுவராக நாகர்கோவிலை சேர்ந்தவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி
நாகர்கோவில்,
உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடுவராக நாகர்கோவிலை சேர்ந்தவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
நியமனம்
44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை மாமல்லபுரத்தில் வருகிற 28-ந் தேதி முதல் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 10-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியின் நடுவர்களில் ஒருவராக நாகர்கோவில் வாட்டர்டேங்க் ரோட்டை சேர்ந்த ஸ்டெல்லா ஷர்மிளா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை போட்டியின் இயக்குனர் பாரத்சிங் சவுகான் வெளியிட்டுள்ளார்.
ஸ்டெல்லா ஷர்மிளா தொடர்ச்சியாக உலக இளையோர் செஸ் போட்டியில் நடுவராகவும், காமன்வெல்த் நாடுகளுக்கிடையே நடந்த செஸ் போட்டியின் நடுவராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய கணவர் டெல்லியில் மத்திய அரசு நிறுவன அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
Related Tags :
Next Story