புகையிலை பொருட்கள் வைத்திருந்தவர் கைது


புகையிலை பொருட்கள் வைத்திருந்தவர் கைது
x

நெல்லையில் புகையிலை பொருட்கள் வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

நெல்லை தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சங்கரநாராயணன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கீழநத்தம் தெற்கூர் தங்கம்மன் கோவில் அருகே, சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த நடராஜன் (வயது 60) என்பவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வைத்து இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 990 கிராம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story