சங்கராபுரம் அருகே புகையிலை பொருட்கள் வைத்திருந்தவர் கைது


சங்கராபுரம் அருகே    புகையிலை பொருட்கள் வைத்திருந்தவர் கைது
x
தினத்தந்தி 16 Dec 2022 12:15 AM IST (Updated: 16 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

சங்கராபுரம் அருகே புகையிலை பொருட்கள் வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.

கள்ளக்குறிச்சி

சங்கராபுரம்,

சங்கராபுரம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் சங்கராபுரம் அடுத்த கொசப்பாடி கிராமத்தில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் பையுடன் நின்று கொண்டிருந்தவரை பிடித்து பையை சோதனை செய்தபோது, அதில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. புகையிலை பொருட்களுடன் நின்றவரிடம் நடத்திய விசாரணையில், அவர் செம்பராம்பட்டை சேர்ந்த கோபிநாத் (வயது 42) என்பதும் மளிகை கடை விற்பனைக்காக புகையிலை பொருட்கள் வாங்கி வந்தபோது சிக்கியதும் தெரியவந்தது. இதையடுத்து கோபிநாத்தை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 9 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story