புகையிலை பொருட்கள் வைத்திருந்தவர் கைது


புகையிலை பொருட்கள் வைத்திருந்தவர் கைது
x
தினத்தந்தி 21 Dec 2022 2:30 AM IST (Updated: 21 Dec 2022 2:30 AM IST)
t-max-icont-min-icon

புகையிலை பொருட்கள் வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்

திருநெல்வேலி

விக்கிரமசிங்புரம்:

விக்கிரமசிங்கபுரத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸ் இன்ஸ்பெக்டர் பெருமாளுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் விக்கிரமசிங்கபுரம் பகுதியில் அவரது தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் முருகேஷ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பள்ளிக்கூடத்துக்கு அருகே 12.750 கிலோ புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த விக்கிரமசிங்கபுரம் அருகில் உள்ள திருப்பதியாபுரத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் கண்ணனை போலீசார் கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய முருகன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story