மூதாட்டியை கொன்று நகையை கொள்ளையடித்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது.
மூதாட்டியை கொன்று நகையை கொள்ளையடித்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது.
திருப்பூர்
குன்னத்தூர் அருகே மூதாட்டியை கொன்று நகையை கொள்ளையடித்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது.
மூதாட்டி கொலை
திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் ஆதியூர் கோரைக்காட்டுதோட்டம் பகுதியை சேர்ந்தவர் பொன்னாத்தாள் (வயது 60). இவர் தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்தநிலையில் தோட்டத்துக்கு வேலைக்காக குன்னத்தூர் திருவாய் முதலியூரை சேர்ந்தவர் பிளம்பர் தமிழரசன் (வயது 32) என்பவர் பொன்னாத்தாள் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது பொன்னாத்தாள் தனியாக இருப்பதையும், அவர் தங்கச் சங்கிலி அணிந்திருந்ததையும் கவனித்தார்.
இந்தநிலையில் தமிழரசனுக்கு மருத்துவ செலவுக்காக ரூ.20 ஆயிரம் தேவைப்பட்டது. எனவே பொன்னாத்தாளை கொன்று அவர் அணிந்து இருந்த நகைகளை கொள்ளையடிக்க தமிழரசன் திட்டம் தீட்டினார். அதை தொடர்ந்து கடந்த 11-6-2017 அன்று பொன்னாத்தாளின் தோட்டத்துக்கு தமிழரசன் சென்றார். அங்கு தனியாக இருந்த பொன்னாத்தாளின் கழுத்தை துணியால் இறுக்கி கொலை செய்து அவர் அணிந்திருந்த 6 பவுன் சங்கிலி, வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டர் ஆகியவற்றை கொள்ளையடித்துவிட்டு தமிழரசன் தப்பினார்.
ஆயுள் தண்டனை
இந்த கொலை குறித்து குன்னத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழரசனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நீதிபதி பாலு தீர்ப்பு கூறினார்.
அந்த தீர்ப்பில் மூதாட்டியை கொலை செய்த குற்றத்துக்காக தமிழரசனுக்கு ஆயுள் தண்டனை, ரூ.3 ஆயிரம் அபராதம், நகை கொள்ளையடித்த குற்றத்துக்காக 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை, ரூ.3 ஆயிரம் அபராதம், இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார். இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வக்கீல் ஜமீலா பானு அஜராகிவா தாடினார்.
---------------
தமிழரசன்