மோட்டார் சைக்கிளில் வந்தவர் ஆட்டோ மீது மோதி பலி


மோட்டார் சைக்கிளில் வந்தவர் ஆட்டோ மீது மோதி பலி
x

கந்திலி அருகே மோட்டார் சைக்கிளில் வந்தவர் ஆட்டோ மீது மோதி பலி

திருப்பத்தூர்

திருப்பத்தூர் வீட்டு வசதி வாரிய (பகுதி 2) குடியிருப்பில் வசிப்பவர் அப்துல் நிசார். இவரது மகன் ரியாஸ் (வயது 21), தனியார் பள்ளி வேன் டிரைவர் ஆக உள்ளார்.

கந்திலியில் இருந்து திருப்பத்தூருக்கு மோட்டார் சைக்கிளில் மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

கிருஷ்ணகிரி மெயின் ரோடு மேம்பாலம் அருகே தனியார் திருமண மண்டபம் அருகே வந்தபோது முன்னே சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது ரியாஸ் சென்ற மோட்டார் சைக்கிள் மோதியது.

இதில் கீழே விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்த ரியாஸ் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.

இது குறித்து கந்திலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story