மடத்துக்குளம் அருகே தூங்கிக் கொண்டிருந்த காவலாளியிடம் செல்போனை நைசாக அபேஸ் செய்து செல்லும் திருடனின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மடத்துக்குளம் அருகே தூங்கிக் கொண்டிருந்த காவலாளியிடம் செல்போனை நைசாக அபேஸ் செய்து செல்லும் திருடனின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
போடிப்பட்டி,
மடத்துக்குளம் அருகே தூங்கிக் கொண்டிருந்த காவலாளியிடம் செல்போனை நைசாக அபேஸ் செய்து செல்லும் திருடனின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
விதை நெல் கிடங்கு
'முழிச்சிட்டிருக்கும் போதே முழியை தோண்டிருவான்'என்பது பலே திருடர்கள் குறித்த விமர்சனமாக உள்ளது. அப்படியிருக்க காவலாளி தூங்கினால் கைவரிசை காட்டாமல் இருப்பார்களா என்ன! அந்தவகையில் மடத்துக்குளத்தையடுத்த மைவாடி பகுதியில் தூங்கிக் கொண்டிருந்த காவலாளியிடமிருந்து செல்போனை மர்ம நபர் ஒருவர் திருடிச் செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மைவாடியில் மோகனசுந்தரம் என்பவருக்கு சொந்தமான விதை நெல் கிடங்கு உள்ளது. இங்கு சின்னப்பன் புதூரைச் சேர்ந்த முத்துச்சாமி என்பவர் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவில் நெல் கிடங்கின் முன் முத்துச்சாமி கட்டிலை போட்டு தூங்கியுள்ளார்.
கண்காணிப்புக் கேமரா
நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் சாவகாசமாக அந்த பகுதியை நோட்டம் விட்டு விட்டு, அங்கிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து தண்ணீர் குடிக்கிறார். பின்னர் முத்துசாமியின் அருகில் சென்று அவர் தலையணைக்கடியில் வைத்திருந்த செல்போனை நைசாக திருடுகிறார். அப்போது விழித்துக் கொண்ட முத்துச்சாமி அந்த நபரை துரத்துகிறார். ஆனால் அதற்குள் மின்னல் வேகத்தில் செல்போனுடன் அந்த நபர் தப்பிச்செல்கிறார்.
இந்த காட்சிகள் அனைத்தும் அங்குள்ள கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியுள்ளது.தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.சம்பவம் குறித்து முத்துச்சாமி அளித்த புகாரின் பேரில் மடத்துக்குளம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.