பட்டாசு வாங்க காரில் வந்தவரை தாக்கி பணம் பறிப்பு
சாத்தூர் அருகே பட்டாசு வாங்க காரில் வந்தவரை தாக்கி பணம் பறித்த 7 பேைர போலீசார் கைது செய்தனர்.
சாத்தூர்,
சாத்தூர் அருகே பட்டாசு வாங்க காரில் வந்தவரை தாக்கி பணம் பறித்த 7 பேைர போலீசார் கைது செய்தனர்.
பீடி கேட்டு தகராறு
கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்தவர் செல்வம் (வயது 29). இவர் அப்பகுதியில் பட்டாசு விற்பனை செய்து வருகிறார். இவர் தீபாவளி விற்பனைக்காக பட்டாசு ஆர்டர் கொடுக்க தனது உறவினர்களுடன் சிவகாசிக்கு காரில் வந்தார். ஆர்டர் கொடுத்து விட்டு திரும்ப ஊருக்கு புறப்பட்டார்.
அப்போது மேட்டமலை எட்டூர்வட்டம் சாலையில் சென்று கொண்டு இருந்த போது மேட்டமலையை சேர்ந்த அய்யனார் (24) உள்பட 2 பேர் காைர மறித்து பீடி கேட்டதாகவும், அதற்கு செல்வம் இல்லை என்று கூறியதாகவும் கூறப்படுகிறது.
7 பேர் கைது
இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அய்யனாருடன் வந்த நபர் தனது நண்பர்களுக்கு போன் செய்தார். பின்னர் 5 பேர் அங்கு வந்தனர். இதையடுத்து அவர்கள் காரில் வந்தவர்களை கடுமையாக தாக்கினர். பின்னர் காரின் பின்பக்க கண்ணாடியை உடைத்து காரில் இருந்த ரூ. 10 ஆயிரத்தை பறித்துச்சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து செல்வம் அளித்த புகாரின் பேரில் சாத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேட்டமலையை சேர்ந்த அய்யனார், பொன் மாடசாமி (34), சின்னஓடைப்பட்டியை சேர்ந்த மாரிமுத்து (31) உள்பட 7 பேரை கைது செய்தனர்.