மரக்காணம் அருகேவீட்டில் ரேஷன் அரிசியை பதுக்கியவர் கைது


மரக்காணம் அருகேவீட்டில் ரேஷன் அரிசியை பதுக்கியவர் கைது
x
தினத்தந்தி 12 May 2023 12:15 AM IST (Updated: 12 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மரக்காணம் அருகே வீட்டில் ரேஷன் அரிசியை பதுக்கியவர் கைது செய்யப்பட்டாா்.

விழுப்புரம்


பிரம்மதேசம்,

மரக்காணம் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் கவியரசு தலைமையிலான போலீசார் மரக்காணம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கந்தாடு கிராமம் பழைய தெருவை சேர்ந்த ராகவன் என்பவரது மகன் ரமேஷ் (வயது 43) என்பவர் தலா 50 கிலோ அளவு கொண்ட 20 மூட்டைகளில் ரேஷன் அரிசியை, வெளிமார்க்கெட்டில் கூடுதல் விலைக்கு விற்பதற்காக தனது வீட்டில் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அங்கு விரைந்து சென்று, அவரை கைது செய்து ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.


Next Story